ஒரு நல்ல நண்பன் உன்னில் பாதியாவான்! அவனை உன் மூன்றாவது கண் எனலாம்!” உலகம் தோன்றிய நாள் முதல் மனிதனுக்குய 'நட்பும்' தோன்றிவிட்டது. வள்ளுவரும் நண்பனை 'உடுக்கை இழந்தவன் கைபோல' என்கிறார். ஆபத்தில், சமயத்தில், அன்பில், துன்பத்தில், அவசரத்தில், அவசியத்தில் என ஒரு 'நல்ல நண்பன்' ஒரு தாய்க்கு பின் உதவுகிறான். இது உண்மை! இந்த நாவலிலும், 'ரத்தன்' ஒரு நல்ல நண்பனாக, காதலனாக, நாட்டைக் காதலிக்கும் ராணுவ 'கர்னலாக' 'சண்டைக் கோழி' தர்சனியின் அன்பனாக, மானஸியின் அன்புச் சகோதரனாக, 'சசாங்'கின் 'மூன்றாவது கண்ணாக' அவனது 'நம்பிக்கை'யாக வருகிறான்! அருணோதயம் அருணன் ஐயாவுக்கு நன்றியும் வணக்கமும்.