இந்தக் கதைகளின் மௌனத்தில் அன்றாட வாழ்க்கையை உரக்கவும் மெல்லவும் பேசியபடி நகர்பவர்கள் சாதாரண மனுஷிகள்; ஆண்கள், எந்த அசாதாரணத் தன்மையும் இல்லாத, பேருந்திலும் ரயிலிலும் கடைகண்ணிகளிலும் ஓட்டல்களிலும் திருவிழாக்களிலும் திருமணங்களிலும் வீட்டில் செய்யும் வைபவச் சடங்குகளிலும் அன்றாடம் நாம் பார்க்கும் சாதாரண நபர்கள். குடிகாரக் கணவனின் பொறாமையும் சொல்லம்புகளையும் தாங்கமுடியாமல் அவளுடன் வரும் தேர்வைச் செய்யமுடியாத பதிமூன்று வயதுப் பையனை விட்டுவிட்டுத் தைரியமாக வெளியே வந்து தனக்கென்று ஒரு வாழ்வு அமைத்துக்கொண்டு எல்லோர் வாய்க்கும் அவலாகி மெல்லப்படும் கல்யாணி சாரங்கன் உலகெங்கும் உண்டு.