இத்தொகுதியில் உள்ள 'மறவோம்'சிவா கிருஷ்ணமூர்த்தியின் மிகச் சிறந்த 'சிறுகதை மட்டுமல்ல, புலம்பெயர்வகை இலக்கியத்தில் தமிழில் எழுதப்பட்ட சிறந்தக் கதைகளில் ஒன்றும்கூட. இது மிக ஆழமாக ஒரு பண்பாட்டு உரையாடலைக் 'கதைத் தளத்தில் நிகழ்த்தி, கதை முடிந்த பின்னர் வாசகனின் எண்ணங்களிலும் நீட்டிக்கச் செய்கிறது. அவருடைய வெற்றி, நுண்ணிய அக அவதானிப்புகள் எளிதாக வந்து செல்வதில் உள்ளது.