ஜார்ஜ் ஹார்ட்டின் எழுத்துகளைத் தமிழ்வழி அறியும்போது தமிழ் கூறும் நல்லுலகம் அவருடைய எண்ணங்கள் ஊறிய ஊற்று நீரின் சுவையை அப்படியே நன்கு சுவைக்க முடிகிறது. இதையே இம்மொழிபெயர்ப்பு முயற்சி எடுத்தியம்புகிறது. ஊறி வந்த ஊற்று நீருக்கு மெருகேற்றும் முயற்சிகள் எதுவும் இல்லை.
மொழிபெயர்ப்பாளனின் விருப்பு வெறுப்பு எவ்வழியிலேனும் திணிக்கப்படவில்லை. ஊறிய நீரைச் சுவையேதும் குன்றாது தமிழர்களுக்குத் தமிழ் வழி அளிக்கிறது இம்மொழிபெயர்ப்பு முயற்சி. -வாசு அரங்கநாதன் பென்சில்வேனியா பல்கலைக்கழகம்