வாழ்க்கையில் நாம என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும்,நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ணாடியாக இந்தக் கட்டுரைகள் பிரதிபலிக்கின்றன.
அன்றாட வேலைப்பளுவினால், தங்களைச்சூழ்ந்துள்ள மனிதர்களை விட்டு விலகி திசை தெரியாமல் ஓடுகிறார்கள். ரயிலிலோ, பேருந்திலோ பயணிக்கும்போது மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத்த் தவறுகிறார்கள். இவற்றையெல்லாம், உண்மைச்சம்பவங்கள், ஆங்கலத்திரைப்படங்கள், சிறகதைகள் மூலம் நயமான வார்த்தைகளில் விளக்கியுள்ளார் எஸ். ராமகிருஷ்ணன்.