பூங்கோதையின் மீது காதல் நினைவாகவே உள்ள தன்னுடைய மகன் பொன்முடியை வடநாட்டுக்கு அனுப்பிவிடுகிறார் அவனது தந்தை மான நாய்கன். பூங்கோதையும் அவனுடைய பிரிவு தாளமுடியாமல் அவனைக் காணப்போகிறாள். வடநாட்டில் ஆரியர்கள் யாகத்திற்குப் பொருளுதவி கேட்க, அந்த யாகத்தை இழிவாகப் பேசுகிறார்கள் பொன்முடியும் மற்ற தமிழர்களும். ஆத்திரம் அடைந்த ஆரியர்கள் இவர்களைக் கொலை செய்து பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிய பொன்முடி தன்னைத் தேடி வரும் பூங்கோதையை எதிர்பாராத விதமாகச் சந்திக்கிறான். இருவரும் நீண்ட இடைவெளிக்கு பின் சந்திப்பதால் ஆர்வ மிகுதியால் ஒருவரை ஒருவர் தழுவ தாவும் வேலையில், பொன்முடியை கொலை செய்ய துறத்தி வந்த ஆரிய வீரன் மறைந்திருந