தமிழ்த்தேசியம் என்பது அதை நிறுவுவதற்கான மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இன்று தமிழ்நாட்டு அரசியலில் முகாமையான விவாதப் பொருளாக வளர்ந்திருக்கிறது. தாங்கள் ஏற்படுத்திய மாய்மாலங்களுக்கு தீவிரப் பகையாக தமிழ்த்தேசியம் முன்வந்திருப்பதை உணர்ந்து இந்தியத் தேசியமும் அதன் இளைய பங்காளியான திராவிடமும் விவாதம் என்ற பெயரால் அரை உண்மைகளையும், அவதூறுகளையும் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றன.