பிரிட்டிஷாரின் திட்டமிட்ட சுரண்டல் பொருளாதாரக் கொள்கைகளால் 19, 20-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் பஞ்சங்கள் உருவாயின. உணவுப் பயிர்களுக்குப் பதில் அபின். புகை, பீடி, தேயிலை, காபி, ரப்பர் ஆகிய பயிர்கள் விளைவிக்கப்பட்டதால், உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. இந்தியாவில் மிராசுகள், மிட்டாதார், பட்டாதார், ஜமீன்கள் சுரண்டல் கூட்டணி அமைத்து ஏழை மக்களை மேலும் ஏழைகளாக்கினர். மார்க்சிய நோக்கில் இதை ஆய்வு செய்யும் போது, பஞ்சம், பசி, பட்டினி ஓரிடத்தில் உருவானால் இன்னொரு இடத்தில் சொகுசுவாழ் கூட்டம் ஒன்று உள்ளது என்பது இயல்பாகத் தெரிய வரும்.
இந்த அடிப்படையில் பேராசிரியர் அமர்த்தியா சென் செய்த ஆய்வைப் பற்றிய கருத்துருதான் முனைவர் கி.இரா.சங்கான் அவர்களின் 'அறிஞர் அமர்த்தியா சென் ஆய்வுகளில் பஞ்சம் பசி பட்டினி' என்னும் இச்சிறுநூல்,