1936ம் ஆண்டு அகில இந்திய விவசாயிகள் மாநாட்டில் உதயமான 'அகில இந்திய கிஸான் சபா' என்ற சுதந்திரமான விவசாயிகள் சங்க அமைப்பின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக விளங்கிய தோழர் Z.A. அஹமது அவர்கள் 1969ம் ஆண்டு விஜயவாடாவில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் மாநாட்டில் உணர்ச்சிகரமானதொரு தலைமையுரை நிகழ்த்தினார். சிறப்பான அவ்வுரையின் தமிழாக்கமே இந்நூல்.
ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான இந்திய விவசாயிகளின் போராட்ட உணர்வையும் எழுச்சியையும் விவரிக்கும் இந்நூல் சுதந்திரத்துக்கு முன்பான இந்தியாவில் உருவான அகில இந்திய விவசாய சங்கத்தின் ஆற்றலும் பெருமையும் மிக்க பங்களிப்பை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.