அவன் என்ன மனுஷன், கொஞ்சங்கூடப் பழகத்தெரியவில்லை, என்று சொல்லிச்சிலர் ஆதங்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆம், அது உண்மையே,ஒரு சிலருக்கு நளினமாக,மனம் புண் படாதவாறு பேசவும் ,பழகவும், தெரிவதில்லை. தனக்குக் காரியம் ஆனால் போதும் என்று பிறர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் பேசிவிடுவார்கள். அவ்வாறே பழகவும் செய்வார்கள். அவ்வாறு அவர்கள் தங்கள் பழக்கங்களை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்தால் சமூகத்தில் ஒரங்கட்டப்பட்டு விடுவார்கள். பழகவும், பேசவும் கற்றுக் கொள்வது அவசியம். அப்போதுதான் சமூகத்தில் அந்தஸ்து கிடைக்கும். இந்நூலில் ஆசரியர் ஸ்வாமி அவர்கள் பழகுவது பற்றி அருமையாகச் சொல்லித் தருகிறார்.