பிரகதாரண்யக உபநிடதம் (Bṛhadāraṇyaka Upanishad, சமக்கிருதம்: बृहदारण्यक उपनिषद्) சுக்ல யசுர் வேதத்தில் அமைந்துள்ள ஓர் உபநிடதம். இதனை யசுர் வேத சாரம் என்றும் அழைப்பர். இவ்வுபநிடதத்திற்கு ஆதிசங்கரர், இராமானுஜர், மற்றும் மத்வர் ஆகியோர் விளக்க உரை எழுதியுள்ளனர். இது மற்ற அனைத்து உபநிடதங்களை விட மிகப் பெரியது.