மந்திரங்கள் தோன்றுவதற்கு இதுவே அடிப்படை. துயர்ங்களும், தொல்லைகளும் வாழ்வின் சுமையாக மண்டிக் கிடக்கும் இந்தக் கால கட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நமக்கு - விண்டுரைக்கமாட்டாத வேதனைகளுக்கு ஓர் வடிக்கால் - ஒரே நம்பிக்கை - உய்விக்கும் வழி மந்திரங்களேயாகும். உள்ளம் உருகி, உள்ளொளி பெருகி, ஊன் கலந்து, உயிர் கலந்து, தன்னில் தன்னை யிழந்து இறை பணியில் ஐக்கிய மாவோம்.