"என் உள்ளுணர்விலேயே கலந்த படைப்புதான் முனைப்பு. எல்லா எழுத்தாளர்களின் உள்ளுணர்வும் ஒரு வட்டம் வரையில் அவர்களின் சுதாப்பாத்திரங்களில் பிரதிபலிப்பார்கள் என்பார்கள். ஆனால். இந்நாவலின் நாயகள் இராமகிருஷ்ணன், குறிப்பாக பள்ளிப்பருவத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் அச்சு அசலாக நானே தான். அதோடு மட்டுமல்ல. இந்நாவலின்கதாபாத்திரங்களில் பெரும்பாலானவர்களும் என்கிராமத்தில் வாழ்ந்தவர்களும் வாழ்வை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மறைந்தவர்களும் ஆவர். மிகச்சிலர் என்கிராமத்தில் கிராமத்தின் அடக்கத்தன்மையை இழந்துவிட்டாலும், நகரத்தின் கபடத்தன்மை நிறைந்த போலித்தனம் நுழைந்திராத என்கிராமத்தில் இன்னும் வாழ்ந்து என்னுடன்
கொண்டுதான் இருக்கிறார்கள்" இது இந்த நாவலின் படைப்பாளி வேணுகோபாலின் கூற்று, நெடுநாளைய வெளியூர் வாசத்திற்குப்பின் தன்னுடைய பெற்றுவங்கிமேனேஜராக சொந்தகிராமத்திற்கேஇடமாற்றம் வந்து சேர்த்தபோதுவீட்டிலும் ஊரிலும்தான் தனிமையானவன்தான் என்று அவன்புரிந்து கொள்கிறான். துயரங்களின் தீக்கொழுந்துகளுக்கு இடையிலும் வாடாமல் நிற்கும் ஒருமலரை, சூறாவளியிலும் அணையாத ஒரு தீபச்சுடரை அவன் நேசிக்கிறான். அந்தப்புனிதத்தை துணையாக ஏற்றுக்கொள்ள இருந்த நேரத்தில் அவனுடைய நண்பனே அம்மலரைகசக்கி வீசிய பின்முடிவு என்ன என்பதுதான் இந்தநாவலின் திருப்புமுனை.
- கே. வேணுகோபால்