அநேக புனிதமான இடங்கள் இப்புவியில் உள்ளன.இருப்பினும், துலாக்கோலில் இடப்பட்ட காசியின் மண்ணின் ஒரு துகளுக்கு எந்த இடமும் ஈடாக முடியாது. கடலை நோக்கி ஓடிக் கலக்கும் நதிகள் பல, ஆனால் அவையெல்லாம் காசியில் ஓடும் சுவர்க்கத்திலிருந்து வரும் கங்கை நதிக்கு ஈடாக முடியாது.