சித்தர்கள் அழியாத உடம்பைப் பெற்றவர்கள், இரும்பைத் தங்கமாக்கும் இரசவாதக் கலையை அறிந்தவர்கள், கூடுவிட்டுக் கூடு பாயும் சக்தி பெற்றவர்கள், முக்கால நிகழ்வுகளையும் அறியக் கூடியவர்கள், நீரிலும் நெருப்பிலும் வானத்திலும் நடந்து செல்லும் வல்லமை பெற்றவர்கள், உலகம் முழுவதையும் தன் வசப்படுத்தி நடத்தும் வசித்துவ ஆற்றல் பெற்றவர்கள், இயற்கைக்கு மாறான அற்புதங்களை எல்லாம் செய்ய வல்லவர்கள் என்றெல்லாம் போற்றப்படுகின்றனர்.