தாரா பிரமாத அழகியாய் இருந்தாள்.நிஜப் பெண்ணா, பட்டுத் துணிப் பொம்மையா? தொட்டுப் பார்த்துத்தான் நிச்யப்படுத்த முடியும். கிரீடம் ஒன்றைத் தலையில் வைத்து சிம்மாசனத்தில் உட்கார வையுங்களேன்.சத்தியமாய் ராணிதான் ஐயா. மறுக்க உங்களுக்கு மனது, வராது அவளை அந்தக் கல்யாண மண்டபமே வேடிக்கை பார்த்த்து.மணையில் இருந்த ஜோடிக்குக்கூட இரண்டாம் பட்ச முக்கியத்துவம்தான் போங்கள்.