நான் பாரத நாட்டைவிட்டுப் போவதற்குமுன், உங்களை ஒரு தடவை பார்க்க வேண்டுமென்று இங்கே வரவழைத்தேன். நீங்கள் உங்களுடைய அலுவலைச் செய்யும் திறமை சீமையிலுள்ளவர்களுக்குத் தெரிய வரும் பக்ஷத்தில், துரைத்தன நிர்வாகத்தில் பாரதவாசிகளுக்குச் சாமர்த்தியம் இருக்கிதா எனும் விஷயத்தில் இனி அவர்களுக்குச் சந்தேகமே உண்டாகாது.