நம்மாழ்வார் பாடியருளிய திருவாய் மொழிப்பாசுரங்கள் சிறந்த தமிழ்ச்
செல்வமாகும். அறிஞர் பி.ஸ்ரீ. அவர்கள் திருவாய்மொழியை அனைவரும் எளிதில்
விரும்பிப் படிக்கும் வகையில் தெளிவுரை, விளக்கங்களுடன் நன்கு
எழுதியுள்ளனர். அவருடைய நீண்ட கால ஆராய்ச்சியும் அநுபவமும் இந்நூலில்
இருப்பதைக் கண்டு பயனடையலாம்.
எல்லோரும் விரும்பிப் படிக்கும் வகையில் கதை போல எழுதப்பட்டுள்ளது இந்நூல்.
உயர்ந்த நூல்களைச் சிறப்பாகவும் ஆர்வத்தோடும் வெளியிட்டு வருகின்ற
சேகர் பதிப்பகத்தார் இத்திருவாய்மொழியை மிகவும் நன்றாக
வெளியிட்டிருக்கிறார்கள். அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற
நல்லெண்ணத்தோடு குறைந்த விலையில் இதனை வெளியிட்டிருப்பது
பாராட்டுதற்குரியது.