மனிதன் இந்தப் பூவுலகில் நிலைத்திருக்க உடலுக்குச் சக்தி அவசியமாகிறது. சக்தியை நாம் திட உணவிலிருந்தும், திரவ உணவிலிருந்தும் சுவாசத்திலிருந்தும் பெறுகிறோம். சுவாசத்தின் மூலம் நமக்குப் போதிய பிராண வாயு கிடைக்கின்றது. பிராண வாயவினுள் பொதிந்திருக்கும் பிராணா சக்தி நம் உடம்பையும் மனதையும் இயங்குகின்றது. உடலுக்குக் கிடைக்க வேண்டிய பிராணா சக்தி அல்லது பிராணன் குறைவுபடும் போது உடல் சோர்வு அடைகிறது. களைப்படைகிறது.