மாணவன் தன் பரிட்சையில் தேற வேண்டும். நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்ற எண்ணத்திலே இருப்பான். வியாபாரி தன் பொருட்களைக் குறுகிய காலத்தில் விற்று லாபம் பெற வேண்டும் என்ற நோக்கிலே இருப்பான். தொழிலாளி தன் உழைப்பிலும், அதன் மூலம் பெறும் ஊதியத்திலும், போனசிலும் மனதைச் செலுத்திக் கொண்டு இருப்பான். விவசாயி தன் மகசூலிலும்,அதன் மூலம் விற்று வரும் பெரும் பணத்திலும் எண்ணம் கொண்டு இருப்பான்.