வரலாற்றுச் சிறப்பு, தொன்மைச் சிறப்பும் வாய்ந்த தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
சோழர் தலைநகரமாகவும், துறை முகப்பட்டினமாகவும் விளங்கிய பூம்புகாரில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்படி ஆய்வு நடத்தப்பெற்றது. வரலாற்றுச்சிறப்பு மிக்க இவ்வகழ்வாய்வில் திரு. வெ. ராம்மூர்த்தி பங்கு கொண்டு ஆய்வில் கிடைத்தவற்றைப் பற்றி அருமையான கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் இவர் அழகன்குளம், மாங்குடி, கொடுமணல், மோதூர், மரக்காணம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் பங்கு கொண்டு தமிழக வரலாற்றுக்கு அரிய சான்றுகளை அளிப்பதில் பங்கு கொண்டவர்.