சமூக அவலங்களை கூர்ந்த பார்வையால் பார்ப்பது, வார்த்தைகளால் அந்த அநீதிகளை சாடுவது, மங்கிய மக்கள் மதிக்கு புதுவெளிச்சம் காட்டுவது போன்றவற்றை பல்வேறு தளங்களில் தவறாது செய்கிறார் வலம்புரியார். 'ஓரு நதி குளிக்கப் போகிறது', என்னும் இந்த கவிதைத் தொகுப்பில் இவர் தனது வேதனைகளை விசித்திர புதுக்கவிதையாக படைத்திருப்பது தமிழ் முற்றத்தில் தங்கநிலா பிரவாகமாய் தெரிகிறது. உரைநடையாக ஆசைப்படுகிற கவிதையைக் காட்டிலும் கவிதையாக ஆசைப்படுகிற உரைநடையைக் காதலிக்கும் வார்த்தை சித்தரின் மற்றுமொரு கவிதைப்படைப்பு இந்நூல்...