இருள் என்பது குறைந்த ஒளி என்று சொல்வது ஏன் என விரிவாக விளக்கியுள்ளார். வசனகவிதையிலேயே கூட, நாம் ஒளியாகக் காண்பதை ஆந்தை இருளாகக் காண்கிறது (ஆந்தைக்குப் பகலில் கண் தெரியாது); நாம் இருளாகக் காண்பதை ஆந்தை ஒளியாகக் காண்கிறது (ஆந்தைக்கு இருளில் கண் தெரியும்) என்று சொன்னபிறகே, இருள் என்பது குறைந்த ஒளி என்று சொல்கிறார்.