பாரத பூமி பழம்பெரும் பூமி. அதில் சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் வளர்ந்து செழித்து நம் மக்களுக்கு, மக்களின் வாழ்வியலுக்கு ஒளிவிளக்காய், வழிகாட்டியாய் நின்று செழுமை சேர்த்தனர்; பெருமை படைத்தனர். இத்தகைய ஞானியாய், யோகியாய், சித்த புருஷராய் வலம் வந்தவர் ‘வைத்தியர் ரத்தினம்' பலராமய்யா அவர்கள்.
தாய்வழியே சித்த மருத்துவ முறைகளைக் கண்டறிந்த இவர், வளரும் பருவத்தில் நீதிமானாய்த் திகழ்ந்தார். நீதித் துறையில் குற்ற வழக்குகளில் மக்களின் குற்றம், குறைகளைத் தீர்த்தாலும் மற்றொருபுறம் தாய்வழி கற்ற தமிழ்மரபு மருத்துவத்தின்பால் காதல் கொண்டு மக்கள் வாழ்வியலில் சந்திக்கும் நோய் நாடி, நோய் முதல் நாடி அறிந்து அவர்களின் பிணிதீர்க்கும் சித்தபுருஷராய் தமிழகத்தில் வலம் வந்தார்.
இவரது சீடர்கள் சிலராயினும் இவரது தத்துவம், மருத்துவம் பயின்று வந்தோர் - வருவோர் பல்லாயிரம் பேர் என்பது