லௌகீக வாழ்வை தாண்டி, 'நாம் எதற்காகப் பிறந்தோம்? வாழ்வின் உண்மையான நோக்கம் என்ன? தன்னை அறிதல் என்றால் என்ன?' போன்ற கேள்விகளைப் பற்றி யோசிக்க வேண்டும். நம் வேதாந்தம் என்ன சொல்கிறது என்று அறிய வேண்டும். மனதின் வெவ்வேறு கோளாறுகளையும், தவறான போக்குகளையும் கண்டறிந்து அதை நெறிப்படுத்த வேண்டும். இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள் இதற்கெல்லாம் உதவியாய் இருக்கும் என்று நம்புகிறேன் - வி.எஸ்.ஸ்ரீதரன்