பெற்றோர்கள் விடலைப் பருவத்துப் பிள்ளைகளுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தகவலையும் சேர்த்து முழுமையாக்கப்பட்டுள்ள இந்த நூலை விடலைப் பருவத்தினர் மட்டுமல்ல, அவர்களுடைய பெற்றோர்களும் அவசியம் படிக்க வேண்டும். விடலைப் பருவத்தைப் பற்றி பிள்ளைகளுடன் விவாதிக்கத் தயங்கும் பெற்றோராக இருப்பவர்கள். இந்த புத்தகத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து படிக்க சொல்லுங்கள். நீங்களும் அவசியம் படித்து பல தகவல்களை கிரகித்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கு மட்டுமின்றி, பேரப்பிள்ளைகள் போன்ற எதிர்கால சந்ததியினருக்கும் தேவையான சிறந்த தமிழ்புத்தகம் இது.
திரு. தளவாய் சுந்தரம் பி.எஸ்.சி., பி.எல்.,
சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர்,
சென்னை, தமிழ்நாடு அரசு.