பக்தி இலக்கியங்களுள் அரியப் படைப்பென கருதப்படுவது பாவை நூல்களாகும். திருப்பாவை, திருவெம்பாவை முறையே வைணவ சைவ சார்புடைய நூல்களாகும். வைணவத்தின் 'சரணாகதி' த்த்துவத்தை திருப்பாவையும், 'அணைந்தோர் தன்மை'யினை சைவத்தின் திருவெம்பாவையும் உள்ளடக்கமாக்க் கொண்டு இயற்றப்பட்ட நூல்களாகும்.
வருங்காலத்தில் பக்தி இலக்கியத்தில் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும், புது காண விழைவோருக்கும் இந்நூல் பயன்படும் என நம்புகிறோம்.
பதிப்பகத்தார்.