சமூகம் வளர்ச்சியுறும்போது அச்சமூகத்தில் வாழும் மனிதனின் சமூகத் தகுநிலை, உள்ளிட்ட பல கூறுகளையும் உள்ளடக்கி ஒரு சிக்கலான பெயரிடும் முறை தோன்றி வளர்கின்றது. மக்கட்பெயரடைகளைக் கொண்டு ஒரு சமூகத்தின் இயங்குநிலையை, அச்சமூகத்தில் வாழும் மனிதனின் இயங்குநிலையை உய்த்திறய முடியும். இத்தகைய மானிடவியல் புல நோக்குநிலையிலிருந்து தமிழின் மக்கட் பெயர்களை, பெயரடைகளை ஆராய வேண்டியதன் தேவையை இந்த நூல் வலியுறுத்தி நிற்கின்றது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)