விளையாட்டுகளில் வெற்றி வாகை சூட விரும்பும் எந்த வீரரும், தான் தேர்ந்தெடுக்கும் துறையை ‘விளையாட்டாக’ எடுத்துக் கொள்ளக் கூடாது! கிரிக்கெட், ஹாக்கி, ஃபுட்பால், டென்னிஸ், ஓட்டப் பந்தயம், ஹை ஜம்ப், லாங்க் ஜம்ப்... இப்படி, தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் இவர்கள் அனைவருக்குமே சீரியஸ் அணுகுமுறை தேவை. ஆட்டக்களத்துக்கு வெளியேயும், உடல் மற்றும் மன ரீதியாக மேற்கொள்ள வேண்டிய பயிற்சி முறைகளை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். வெற்றி வாகை சூடிக்கொள்ள விரும்பும் ஒரு வீரர், மனதளவில் தன்னை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும், எதிரணியினரின் பலம் மற்றும் பலவீனங்களைத் தெரிந்து கொண்டு எப்படி அவர்களை எதிர்கொள்ள வேண்டும், கடந்த காலத் தோல்விகளை நினைத்து குழம்பிக் கொண்டிருக்காமல், வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு எப்படி செயல்பட வேண்டும் என்பதையெல்லாம் விரிவாக அலசுகிறது இந்த நூல். B.P.பாம் எழுதிய ‘winning habits’ (பியர்ஸன் வெளியீடு) நூலின் தமிழ் வடிவமே இது! யோகா, ஜபித்தல் என்று எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டிய பயிற்சிமுறைகளோடு, குறிப்பிட்ட ஒவ்வொரு விளையாட்டுக்குமான அணுகுமுறைகளையும் எளிமையாக விளக்குகிறார் நூலாசிரியர். மிகச் சிறந்த விளையாட்டு வீரராகி, பதக்கங்களையும் விருதுகளையும் குவிக்க கனவு காணும் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் இது. இந்தப் புத்தகத்தைப் படித்து அதன்படி பயிற்சிகளைத் தொடர்ந்தால் வெற்றி வாகை உங்களுக்கே!