உறங்குவது போல் நடித்தேன்
உனது ரகசிய நாடகத்தை ரசிக்க"
இந்த ஹைக்கூ கவிதை, இந்த கதை தொகுப்பில் ஒரு கதையின் ஊடே வருவது
ஹைக்கூ மட்டுமல்ல, கதைகளும் வாசிப்பனுபவத்தை இனிமையாக்கும், மெல்லிய காதல் இழையோடும், சுவாரஷ்யமான தொகுப்பு தான்
இந்த சிறுகதைகள் பிரபல இணையப் பத்திரிக்கைகளில் பிரசுரிக்கப்பட்டு பலராலும் விரும்பி வாசிக்கப்பட்டவை . இந்த நூலின் ஆசிரியர், பிரபல வார இதழ்களின் சிறுகதை போட்டிகளிலும், கண்மணியின் நாவல் போட்டியிலும் வெற்றி பெற்று பிரசுரித்துள்ளார்