காஞ்சீவரம் நடராச முதலியார் அண்ணாதுரை (C. N. Annadurai) இந்திய
அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக அவர்
அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு ஆட்சி அமைத்த
காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப்
பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர். பல
புதினங்களும், சிறு கதைகளும் மற்றும் அரசியல் நாடகங்களுக்கும்
நாடாகமாக்கம், திரைக்கதைகள் எழுதியவர்[7]. அவரே கதாபாத்திரமேற்று
நாடகங்களில், திராவிடர் கழக பிரச்சார நாடகங்களில் நடித்துள்ளார். காதல்
ஜோதி, சந்திர மோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்), கம்பரசம், தீ பரவட்டும்!
பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். பெரும்பாலான நூல்கள் இன்றும் அச்சில்
கிடைக்கின்றன.