அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் பல்வேறு தலைப்புகளில் விஞ்ஞான் பிரசார் எண்ணற்ற நூல்களை வெளியிட்டு வருகின்றது. மக்களுக்குரிய அன்றாட அறிவியல், இந்தியாவில் அறிவியல் மரபுரிமை, இயற்கை வரலாறு, சுகாதாரம், நீங்களே செய்து பாருங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் நூல்கள் பல வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. விஞ்ஞான் பிரசார், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களை விளக்கும் தரமான வெளியீடுகளை குறைந்த விலையில் அதிக கவனம் செலுத்தி வெளியிட்டு வருகின்றது. மேலும், இவற்றை விஞ்ஞான பிரசார் அனைத்து பிரிவினருக்கும் பயன்படுகின்ற வகையில் முக்கியமான இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட முனைந்துள்ளது.