நவீன இலக்கிய ஆளுமையான நாஞ்சில் நாடன், 1975ஆம் ஆண்டு முதலாகத் தொடர்ந்து எழுதிய சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், புத்தக வடிவம் பெற்றுள்ளன. சமகால் வாழ்க்கையின் விழுமியங்களையும் மனித இருப்பின் உன்னதங்களையும் பதிவாக்கியுள்ள இவரின் புனைகதைகள், பண்பாட்டுப் பதிவுகளாக விளங்குகின்றன. நாஞ்சில்நாட்டுப் பின்புலத்திலிருந்து விரிந்திடும் நாஞ்சில் நாடனின் புனைவுலகு, தமிழ்ச் சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றமாக விளங்குகிறது; வாசிப்பில் முடிவற்ற அதிர்வுகளை உருவாக்குகிறது.