முற்போக்கு எழுத்தாளர் திரு. ம. பிரபாகரனின் எட்டுக் கதைகளின் தொகுப்பு இந்த நூல். சமுதாயத்தில் நாம் காணும் பல்வேறு விதமான நிகழ்வுகளை இக்கதைகள் பிரதிபலிக்கின்றன. கதை மாந்தர்கள் யதார்த்தமாகச் சித்தரிக்கப்படுகின்றனர்.
காதலுக்கு ஊரெறிந்த கதையுண்டு. நரைவரை திரையிட்ட நினைவுகளோடு நடைப்பிணமான நிஜமுண்டு. சாதனைக் காதல், சரித்திக்காதல் யாவும் இன்று எஸ்.எம்.எஸ். சில் தீர்மானிக்கபடுகின்றன.
காதல் இருக்கிறது. காதலர்கள்தான் இல்லை. ஓரிருவரைத் தவிர...
இக்கவிதைத்தொகுப்பில் ஏதேனும் ஒரு கவிதை உங்களிடம் கடந்த, நிகழும் நாட்களுக்குள் விரல் பிடித்து இழுத்து செல்லுமாயின் அது கவிதைக்குக் கிடைத்த வெற்றியாகும். அப்படி எத்தனை வெள்ளிகளை சேர்க்கும்? என்று தெரியவில்லை. அநேகமாகவும் இருக்கலாமென்ற நம்பிக்கை.
- பாவை பப்ளீகேஷன்.