உணர்ச்சிகளின் வடிவம் கவிதை. அதனால் வாசிப்பாளரின் உள்ளத்தில் அசைவை உண்டாக்கத் தெரிந்தவன் கவிஞன். வெற்று வர்ணனையும் பொருளற்ற சொல்லடுக்களும் மனதை அசையச் செய்யும் கவிதையாகமாட்டா. கவிதையின் ஆற்றல் அளப்பரியது. அது உறுக்கிவிடும் எண்ண வெடிப்புகளால் புரட்சி தோன்றும். பிரளயம் ஏற்படலாம் வேட்கை வெந்தசலால் மானுடன் சீறி எழும். குத்தீட்டிகளாகிச் சமுதாயத்தைக்குத்திக் கிழிக்கும். மொழி, இனம், சமுதாயத்தின் கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளால் கவிஞன் வெகுண்டெழுகின்றான். வெந்தணற்புழுவாய் துடிக்கிறான். பொங்கி எழும் உணர்வுகளால் கனவாகிப் போன சொற்களால் கவிதை வடிக்கிறான். நூல் முழுவதும் மேகதாசனின் கருத்துக்கள் பரவிக்கிடக்கின்றன. அவை அவரது ஏக்கத்தின் வெளிப்பாடாகவும் ஏமாற்றத்தின்
விளைவாவும் இருக்கலாம். ஆனால் அவை படிப்பவர்களை வாழ்க்கைப் பயணத்தில் எச்சரிக்கை செய்யும் என்பது உண்மை.
- தமிழ்ப்பெரியசாமி.