இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விரதத்திற்கும், பண்டிகைக்கும் தனித்தனியே காரணங்கள், தாத்பரீயங்கள், பலன்கள்
இருக்கின்றன. சட்டை அணியவும், செருப்புப்போடவும் காரணத்தை கற்றுத் தந்தவர்கள், இவர்களுக்கு மட்டும் ஊரோடு ஒத்துப்போகும் பழக்கத்தை கற்றுத் தந்து விட்டார்கள். இது நம் துரதிருஷ்டம், அதனால்தான், காரணங்கள் தெரியாமலே விரதமிருக்கிறோம், பலன்கள் தெரியாமலே பண்டிகைகள் கொண்டாடுவதற்கான காரணங்கள்,அதன் பலன்கள், அச்சமயங்களில் கடைபிடிக்க வேண்டிய முறைகள், அதன் அவசியங்களைப் பற்றி இந்நூலில் இடம் பெற்றிருக்கும் தகவல்கள் ஓரளவிற்கேனும் நீக்கும் என நம்புகிறேன். தவிர, எல்லா விரத பண்டிகை வழிபாட்டிற்கும் பூஜைவழிபாடும், விதிமுறைகளும் பொதுவானது என்பதால், தனித்தனியாக எல்லா தலைப்புகளிலும் இல்லாமல் ஒரே தலைப்பில் அது பற்றிய விபரங்கள் தெளிவாக்கப்பட்டுள்ளது.
- பதிப்பகத்தார்.