மானுட வாழ்க்கை மிகவும் நுட்பமானதாக இருக்கிறது. மர்ம முடிச்சுகள் நிறைந்ததாக இருக்கிறது.
நம்முடைய அனுபவங்களை அகழ்ந்து பார்த்தாலும் அதன் நுட்பங்கள் பிடிபடுவதில்லை. நம்முடைய வாழ்க்கைப் பதிவுகளை வடித்துப் பார்த்தாலும் அதன் புதிரான பக்கங்களைப் புரட்டி பார்க்கமுடிவதில்லை.
ஆனால் ஒன்று.. வாழ்வின் இத்தனை பரிமாணங்களையும் மிக மிகச் சரியாக உள்வாங்கிக்கொண்ட எத்தனையோ மாமேதைகள் இதற்கு முன் வாழ்ந்துதான் இருக்கிறார்கள். அவர்களுள் குன்றக்குடி அடிகளாரும் ஒருவர்.
அவரின் சிந்தனைப் பதிவுக்குள் ஆழ்ந்து பாருங்கள். உங்கள் சிந்தனைகள் புத்தொளி பெற்று புதிய சிறகுகளுடன் பறக்கத் தொடங்குகிற பரவசத்தை அடைவீர்கள்.