சிந்தனை என்பது ஒரு வானம். விரிந்து கொண்டே செல்லும். அதற்கு எல்லை கிடையாது. சிந்தனை விரிய விரிய அறிவு ஆழப்படும். வாழ்வின் புதிர்கள் புலப்படத் தொடங்கும். வாழ்க்கை வசப்படத் துவங்கும்.
இதோ, இந்தப் புத்தகத்துள் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சிந்தனை, வானம்போல் விரிகிறது. வள்ளுவம் என்னும் மையப்புள்ளியிலிருந்து இந்தச் சிந்தனைகள் புறப்பட்டிருக்கின்றன.
வாசித்து முடித்ததும், வாழ்வின் புரியாத பல பக்கங்களைப்புரிந்து கொண்டதுபோல் ஓர் உணர்வு உண்டாகிறது.
உங்கள் சிந்தனைச் சிறகுகளை விரிப்பதற்குப் புதிய ஆகாயமொன்று இந்நூல் நிச்சயம் வழங்கும்.