அன்புக் குழந்தைகளுக்கு என் இனிய வணக்கங்கள்!
பாடங்கள் படிப்பது பரீட்சையில் தேர்ச்சி பெற... இதுபோன்ற கதைகளை நீங்கள் படிப்பது அறிவுக்குத் தேர்ச்சித் தர...
கதைகளைப் படிப்பதும், கேட்பதும், பிறருக்குச் சொல்லுவதும் தான் இந்த மாணவப் பருவத்திற்கு ஒரு வரப்பிரசாதம். அதிலும் சிறு சிறு கதைகள் என்றால் உங்கள் நண்பர்களோடு கலந்துரையாடி மகிழ உறுதுணையாய் இருக்கும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டது தான் "இந்த நட்பின் பெருமை" என்ற நூல்.
ஆசிரியப் பெருமக்களே! பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற நூல்களை வாங்கிப் பரிசளியுங்கள்! ஏனெனில்... அவர்கள் வளர்ச்சி, நிச்சயம் உங்களுக்குள் ஏற்படும் கிளர்ச்சி.
என்றும் அன்புடன்அருப்புக்கோட்டை செல்வம்