அரசியல் இலக்கிய வரலாற்றில், ட்ரொட்ஸ்கி எழுதிய காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி புத்தகத்தைப் போன்று காலத்திற்கு தாக்குப் பிடித்து நின்றிருக்கக் கூடிய படைப்புகள் வெகு சிலவே. அது முதலில் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகளுக்கு அதிகமாகியும், சோவியத் ஒன்றியம் குறித்த அதன் பகுப்பாய்வு இன்னும் விஞ்சப்படாத ஒன்றாகவே உள்ளது. சோவியத் சமூகத்தின் கட்டமைப்பையும் இயக்கவியலையும் புரிந்து கொள்வதில் கடந்த சில தசாப்தங்களில் மக்கள் மீது “சோவியத்-இயல்'' சுமத்தியிருக்கும் எண்ணிலடங்காத ஆயிரக்கணக்கான எழுத்துத் தொகுதிகளை முறையாகத் திறனாய்வு செய்வதை விட ஒருமுறை காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியைப் படிப்பது கூடுதலான அறிவை வழங்கும். மார்க்சிச பகுப்பாய்வில் ட்ரொட்ஸ்கியின் உச்சமான படைப்பின் விஞ்ஞானபூர்வ மதிப்பையும் ஏராளமான உதவித்தொகை பெறும் கல்வியாளர்கள் மற்றும் பரிசுவெல்லும் செய்தியாளர்களின் இணக்கவாத சாதாரண படைப்புகளை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான புறநிலையான வழியை கடந்த ஐந்து ஆண்டுகளின் நிகழ்வுகள் வழங்குகின்றன. கோர்பசேவ் அதிகாரத்தைப் பிடித்த நிலையிலும் கூட, சோவியத் அரசாங்கம் மத்திய திட்டமிடல் கோட்பாட்டை நிராகரிக்கும் என்பதை, உற்பத்தி சாதனங்கள் தனியார் சொத்தாக இருப்பதன் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொள்ளும் என்பதை, சந்தையை நாகரிகத்தின் உச்சமான சாதனையாக பிரகடனப்படுத்தும் என்பதை, அத்துடன் உலக முதலாளித்துவத்தின் பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புக்குள்ளாக சோவியத் ஒன்றியத்தை முழுமையாக இணைக்க முனையும் என்பதை இவர்களில் யார் கணித்திருந்தார்கள்