நாம் கடந்த காலத்தில் என்ன செய்துள்ளோம் என்பதைவிட நம் இறையாண்மையை வென்றெடுப்பதற்கு வருங்காலத்தில் நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதுதான் முதன்மையானது என்பதைப் புரிந்துகொள்கிற இடதுசாரி இயக்கம் தேவை. அனைத்து மக்களும் முழுமையான மேம்பாடு அடைவதை உறுதிப்படுத்தும் குமுகத்தைக் கட்டியமைப்பதுதான் அப்படிப்பட்ட இறையாண்மையை அளிக்கும். அதுதான்இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கான ஒப்புரவியக் குமுகம்.