நாளொரு கண்டுபிடிப்பும் பொழுதொரு சாதனையுமாக அறிவியல் வளர்ந்து வருகிறது. இந்த கண்டுபிடிப்புகளையும் , சாதனைகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். தெளிவான தமிழ், பாமரரும் அறிந்து கொள்ளும் வகையில் கருத்துக்கள், நோய்களை எப்படி அறிந்து கொள்வது ? எப்படி கண்டுபிடிப்பது? அவைகளை எவ்வாறு தடுப்பது? வந்த பின் எப்படி சிகிச்சை எடுத்துக்கொள்வது என்பனவற்றை மிக எளிமையான முறையில் தெள்ளத்தெளிவாக எழுதி இருக்கிறார். இந்தப் புத்தகம் பாமரர்களுக்கும், படித்தவர்களுக்கும் சில மருத்துவர்களுக்கும் மிகவும் பயன்படுவதாக அமைந்திருக்கிறது. சிறு நீரக அழற்சி வாலிப விளையாட்டு விபரீதங்கள் ப்ராஸ்டேட் புதப்பெருக்கம் நோய்களைக் கண்டுபிடிக்கும் வழிமுறைகள் இவை எல்லாம் மிகத்துல்லிரமாக எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் சிறுநீரக மருத்துவ நோய்களைப் பற்றி ஆராய்ந்து எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியிருப்பது பாராட்டிற்குரியது.
- ம.சு. அமரேசன்.