போட்டோஷாப் எனபது, போட்டோக்களை அழகுற edit செய்து -photo ஆல்பங்கள், புத்தக அட்டைப்படங்கள், சினிமா
போஸ்டர்கள், vcd cover -கள் மற்றும் பெரிய பெரிய hoardings போன்றவற்றையெல்லாம் கூட அனாவியாசமாக design செய்து
கொள்ளப் பயன்படுகிற ஒர் அற்புதமான ஸாஃப்வேராகும். மல்ட்டிமீடியாவின் முதல் 2 ஸாஃப்ட்வேர்களாக நாம் வெளியிட்ட பேஜ்மேக்கர் -7.0 மற்றும் கோரல்ட்ரா -12 ஆகிய புத்தகங்களை மிக நன்கு பயின்றிருக்கும் உங்களை, ஒரு முழுமையான grabhic designer -ஆக ஆக்கப் போவது இந்தப் போட்டோஷாப் cs என்கிற நூல்தான் என்பதால் , இந்நூலையும் வழக்கம்போல் மிகவும் சிரத்தையோடுதான் நான் எழுதியிருக்கிறேன். ஆனால், போடோடோஷாப் என்பது , வெறுமே நமது grabhic designers -க்கு மட்டும் பயன்படுகிற ஒரு சாதாரண குட்டி ஸாஃப்ட்வேர்தான் - என்றில்லாமல் ஒட்டுமொத்த மல்ட்டிமீடியாத் துறைக்கும் இதுதான் இருதயம்- என்பது போல் நடைமுறையில் இருப்பதில் , நீங்கும் இந்நூலை மிகுந்த அக்கறையோடு படித்து, மாய விநோதங்கள் பல நிகழ்த்தும் நவீன உருப்பெற்று வெல்லுங்கள். நூலில் ஜயம் ஏதும் எழுந்தால், தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள.
-ஆசிரியர்.