printing media - வில் முதன்மையாகப் பேசப்பிடுகற ஸாஃப்ட்வேராகும் இந்த pagemaker என்னும் software . இதனைக்கொண்டு
visiting card களையும், invitation - களையும், அட்டவணைகளையும் , ஏன் பலபேஜ்களைக் கொண்ட டாக்குமெண்ட்களையும் கூட மிக எளிதாக நாம் தயாரித்துவிடலாம். இவற்றையெல்லாம் விட, பெரிய பெரிய புத்தகங்களைத் தயாரிக்கிறவர்களும் கூட இந்தப் பேஜ்மேக்கரை நம்பித்தான் இப்போது தொழில்புரிகிறார்கள் என்பதையும் நீங்களே உணர்ந்துவிடுவீர்கள். கிட்டத்தட்ட ஒரு 3,4 இன்ஸ்ட்டியூட்களில் சேர்ந்து படித்துவிட்டு வெளியே வந்தால் அப்போது உங்களுக்கு எவ்வளவு knowledge இருக்குமோ அவ்வளவு knowledge இந்த ஓரே புத்தகத்தைப் படிப்பதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் என்பதற்கு மனச்சாட்சியோடும், நம்பிக்கையோடும் இம் முதல் பக்கத்தில் உறுதியளிக்கிறோம். இவ்வுறுதி இப்புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது 100% மெய்ப்பட வேண்டுமென்றால் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பயிற்சிகளையும் ஒருமுறைக்கு இரு முறை கண்டிப்பாக நன்கு செய்து பாருங்கள்.
-பதிப்பகத்தார்.