இந்நாவலில் வரும் ராமச்சந்திரன் சிறந்த குடும்பத் தலைவராகத் திகழ்கிறார். ரங்கசாமியும் இவரைப் போல் பிரகாசிக்கிறார். இந்தக் கதாபாத்திரங்களைப்போல் பலர் சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் நமக்குப் பாடங்களாகத் திகழ்கிறார்கள். நல்லவர்களும் கெட்டவர்களும் நமக்குப் பல பாடங்களக் கற்றுத் தருகிறார்கள் என்பதே உண்மை.
பாசக் கண்களில் வரும் கதாபாத்திரங்கள் உங்கள் உறவினர்கள் போல் ஒட்டிக் கொள்வார்கள்.