கடந்த காலங்களில் சமையல் பயிற்சி என்பது குடும்பத்தில் பாட்டி, அம்மா - இவர்களால் வழிவழியாக பயிற்றுவிக்கப்பட்டது. அத்தகைய கூட்டுக் குடும்பங்கள் அருகிவரும் இக்காலத்தில் சமைக்கத் தெரியா சகோதரிகள் பாடு பெரும் திண்டாட்டம்தான்.
அத்தகையோருக்கு உதவும் வகையில் இந்நூலில் பல்வேறு சமையல் வகைகள், மற்றும் சூப், ஐஸ்கிரீம் செய்யும் குறிப்புகள் தெளிவுற விளக்கியுள்ளேன்.
அன்புச் சகோதரிகளுக்கு இந்நூல் நன்குப் பயன்படுமாயின் அதுவே நான் பெறும் பெரும்பேறு.