உணர்ச்சிகள் உருவாக்கும் உடல் நோய்கள் ; உணர்ச்சிகள் கூட பலவித உடல்நோய்களை உண்டாக்கலாம். இவ்வுண்மையைப் பொதுமக்கள் அறியும் வண்ணம் டாக்டர் தி. ஜெயராமகிருஷ்ணனும் ,திரு. பு.ஜெயச்சந்திரனும் இணைந்து எழுதிய ' உணர்ச்சிகள் உருவாக்கும் உடல் நோய்கள்' என்ற இந்நூல் தெளிவாக்குகிறது. குழந்தை வளர்ப்பில் ஏற்படும் குறைபாடுகளும், தாய் -சேய் உறவில் தோன்றும் பிணக்குகளும், சமூக உறவில் தோன்றும் பிணக்குகளும் , சமூக உறவில் ஏற்படும் சிக்கல்களும், பாலுணர்வில் ஏற்படும் மாற்றங்களும் , தனி மனித உணர்ச்சிப்போராட்டங்களும் எவ்வாறு பண்பியல் தொகுப்பின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. என்பதை இந்நூல் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது. இப்பாதிப்பினால் ஏற்படும் உடல் நோய்களை வகைப்படுத்தி, அவை தோன்ற அடிப்படையாக அமையும் உடலியல் மற்றும் உளவியல் காரணங்களை மிகத் தெளிவாக்க் கூறி, ஒருங்கிணைந்த சிகிச்சையையும் வாழ்க்கை விவரத்துடன் விளக்கியிருத்தல் அறிவியல் தமிழுக்கு ஒரு புதிய முயற்சியாகும்.பொதுமக்கள் இந்நூலைப் படித்து பயன் பெறுவர் என்கிற நம்பிக்கையில் இதனை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.
-பதிப்பகத்தார்.