முக்கியப் பண்டிகைக் காலங்களில் டி.வியில் ஓயாது ஒலிக்கும் ஸ்வீட் விளம்பரங்கள் நாம் அறிந்ததுதான். காதில் தேனாய் இனிக்கும் விளம்பரங்களைச் செவிமடுத்து அதை வாங்கப்போனால் அதன் விலையோ நம்மைச் கசக்க வைக்கும்.
அத்தகைய இனிய பட்சணங்களையும், கார வகைகளையும் நமது வீட்டிலேயே குறைந்த செலவில் படைத்துச் சுவைப்பது ஓர் இனிய அனுபவம் - மகிழ்ச்சியுமாகும்.
இதனை சாத்தியமாக்கும் வகையில் பேக்கரி அயிட்டங்களான பிரெட், பிஸ்கட், கேக், ஜாம் வகைகள் மற்றும் இனிப்பு, கார பட்சணங்கள் செய்யும் முறையையும், அளவையும் இந்நூலில் விளக்கியுள்ளேன்.
- தமிழரசி கோபிநாதன்