தமிழ்மொழிக் கல்வியில் பின்தங்கி வருவதைக் காண்கிறோம். அந்த வகையில் தமிழை வளர்த்தச் சான்றோர் பெருமக்களை இப்போதுள்ள மாணவர்களும், இளையோரும் தம் மனத்தில் கொள்ளவேண்டும் என்னும் பெரும் ஆவலால் இந்த நூலைத் தமிழ் வளர்த்த பெருமக்களுக்கும், எனக்குத் தமிழ் சுவாசிக்கக் கற்றுத்தந்த என் ஆசிரியப் பெருமக்களுக்கும், என் தமிழ் இலக்கிய நண்பர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.