இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளை பயமும்,பதற்றமும் கொண்டே கடக்க வேண்டியுள்ளது. காட்சி அனுபவத்தால் மட்டுமே பெறக் கூடிய அமானுஷ்ய உணர்வை இக்கதைகள் எளிதாக நமக்கு கடத்துகின்றன.மூன்றாம் தர துப்பறியும் கதைகளைப் போல இவை இல்லை.இலக்கிய நேர்த்தியோடு, அழுத்தமான கதைக் களத்தோடு சொல்லப்பட்டவை. தேர்ந்த திரைக்கதையின் இயல்போடு நம்மை வியப்பில் ஆழ்த்துபவை.ஹிட்ச்சின் விருப்ப பட்டியலில் இடம் பெற அவை அசாத்திய தன்மை கொண்டிருக்க வேண்டும் அல்லவா?.
ஹிட்சின் ரசிகர்கள் தவற விடக் கூடாத தொகுப்பிது. அவர் திரைப்படங்களில் கிடைக்கப்பெறும் அதே மனநிலையை தந்து செல்லும் கதைகள் இவை.